ஒரு முறை ஒரு சான்ஸ்!

அம்மா

நான் வாழ உயிர்
கொடுத்தாய்

நான் நடைபழக
உன் விரல் கொடுத்தாய்

நான் பேச நீ
மொழி கொடுத்தாய்

நான் எழுத
என் விரல் பிடித்தாய்

நான் வளர நீ
மெலிந்தாய்

பூவை பார்ப்பதை
போல் பார்த்துக்கொண்டாய்

நான் தூங்கையில்
என் கன்னம் கிள்ளினாய்

தெரிந்தும் கண் திறக்காமல்
ஏங்குவேன் நீ

இன்னும் என்னை கொஞ்ச
வேண்டும் என்று

சிலநேரம் நான் உன்னை
காயப்படுத்தி இருக்கிறேன்

இருந்தும் என் பிள்ளை
தான் என்று ஏற்றுக்கொண்டாய்

என்ன பால் மனது
உனக்கு சின்ன

காய்ச்சல் என்றாலும்
அழுது தவித்து விடுகிறாய்

உன் அன்பு மழையில்
நனைய இன்னும் எத்தனை

நாள் நாளும் காய்ச்சலில்
இருக்கலாம் வளர்ந்தும்

என் கை விரல் பிடித்து
நடப்பாய் உன்

கண்களுக்குள் என்னை
வைத்து காக்கிறாய்

இப்பிறவி போதாது
உன் அன்பில் நனைய

அம்மா எனக்கு
வரம் கொடு

மீண்டும் ஒரு முறை
உன் மகளாய் பிறக்க !

இல்லை எனக்கு
ஒரு முறை

வாய்ப்பு கொடு
என் மகளாய் பிறந்து !

.................i love u mom ..........

எழுதியவர் : dpa (22-Apr-11, 12:03 pm)
சேர்த்தது : deeps
பார்வை : 440

மேலே