நீலவேணி அம்மன் திருவருள்

கண்கள் தான் ஆயிரம் கண்கள் தான்...!
என் "நீலவேணி அம்பாளின்" கடைக்கண்களே...!
உலகில் ஆயிரம் அன்னை இருந்தாலும்,இந்த "பூ" உலகில் உன்னை போல் அன்னையில்லை...!
தினமும் அதிகாலையில் உன் முகம் மலர்வதால் சூரிய கதிர்கள் கூட வெட்கத்தில் மறையும்...!
பக்தன் உன் பக்தன் உன்னை நாடி வரும் பக்தன்...!
மனம் உருகி உன்னிடம் கேட்டால் கிடைப்பது நிச்சயம்...!
வழியின்றி தடுமாறி நின்றேன் "உன் சந்நிதியில்"...!
உன் அருள்மழையால் வழி கிடைத்தது...!
ஆயிரம் துயரங்களும்,ஆயிரம் கஷ்டம் வந்தாலும் "நீ இருக்கிறாய் " என்று என் மனதை தேற்றிய நாள் தான் அதிகம்...!
அம்மா ...!
நம்பினோர் கெடுவதில்லை...!
உன்னை உருகுவோர் கெடுவதில்லை...!
வஞ்சமில்லா நற்குணங்களை தந்தவளே...!
தஞ்சமென்றி உன் திருவடியை அடைந்துவிட்டேன்...!
"அன்னையே"...!