தந்தைக்கு ஓர் கடிதம்

அன்புள்ள அப்பாவுக்கு
மகனெழுதும் கடிதம்
நல்லாபடிக்கனும்னு பட்டணம் தான் நீங்க அனுப்ப
வெள்ளாமை காட்டை விற்று வேலையத்து நின்னீங்க !

உருப்படியா படிக்கணும்னு உள்ளுக்குள்ளே நினைச்சே
உள்ளூரைவிட்டு நானும் வந்து பட்டணத்தில் தனிச்சேன்
பட்டம் படிச்சவனும் பட்டணத்தில் பைத்தியமாய் சுத்தகண்டு
பயம்வந்து பக்குனுதான் அடிக்குதப்பா என்மனசிலே ...

வெளஞ்ச நிலத்தைவித்த வேதனையில் நீ இருந்தும் கூட
தழைஞ்ச மகனை நம்பி தன்னம்பிக்கையை வளர்த்துகிட்ட
தன்னம்பிக்கையாய் தானிருக்கேன் இருந்தும் எனக்குள்ள
எண்ணக்குழப்பம் வந்து என்னை குழப்புது !

அறிஞ்சமனிதரெல்லாம் அவசரத்தில் பறக்கும் போது
தெரிஞ்சே தெரியாததும் நடக்குது அறிந்தும்
அறியாததுபோல் மனிதமிங்கு செத்து கிடக்குது!
அவசர உலகமப்பா அவகாசம் இல்லையப்பா!!

ஏதோ இருக்கிறேன் ஏழையாகி கிடக்குறேன் !
காதோ அடைக்குது நாசியில் நாற்றமடிக்குது !
நம்மஊரை போல இங்க சுத்தம்பத்தம் இல்லையப்பா
அம்மா பாசம் போல காசு தந்தாலும் இங்கு கிடைக்குமா ?

உனக்கு ஒருகவலை நான் நல்லா படிக்கணும்னு
எனக்கோ பெருங்கவலை எப்ப நம்மூருக்கு போவோம்னு
விடியாத இரவோட தினம் தவிக்கிறேன்
வீட்டுகாவலுக்கு கொசுவைத்தான் வளர்க்கிறேன்!!

எப்படிப்பட்ட அப்பாம்மா உங்களை விட பெரிதென்ன?
மடி முட்டும் மாடுகண்ணு போல தானே வளர்த்தீங்க
மருவாதை இல்லா ஊரில் என்னை ஏன்? சேர்த்திங்க
பேருதானே மாநகர் ஊரை சுற்றி நரகம் பாரு !

அடுத்தவீட்டில் யாரென்று அறிந்திடாத உலகத்தில்
இழுத்து பூட்டி கதவைசாத்தும் இங்கிதமில்ல நகரமப்பா
நல்லவன் மாதிரி நடித்து நடித்து கொள்ளையடிக்கும் ஊரப்பா
கல்லூரிபீஸ் கட்டும்போதே நீங்க அறிஞ்ச உண்மைதானப்பா !!

மனசாட்சி விலைபோகும் பணதாட்சியில்
பட்டம்படிச்சும் பயனில்லை வேலை கிடைக்க வழியில்லை
பட்டம் வாங்க நிலம்வித்தீங்களே? நாளை வேலை வாங்க நானுமென்ன செய்ய
கட்டம் பார்த்து சொல்லுங்கப்பா கட்டாயமா படிக்கனுமா ?

எத்தனை சலுகை இருக்குது சட்டபுத்தகத்தில் படிச்சது !
எத்தனை கருப்பு கோட்டுக்குள் வெள்ளாடுகள் இருக்குது
நல்லா படிச்சா போதுமா நம்பிக்கைவச்சா தேறுமா ?
ஒன்னும்புரியாமல் நானுமிங்கே தவிக்கிறேன்

என்னமோ ஏதோ தெரியல கண்ணுல கருப்புத்துணியை
நீதிதேவதைக்கு கட்டிவிட்ட கயவன் யாரப்பா ?
பொட்டலில் நீங்கள் சுண்ணாம்பாக வேகுறதெண்ணி
எனகுள்ளே என்னை நானே தேத்திக்கிறேன்
இப்படிக்கு உங்கள் ஆசைமகன் தர்மராஜா !

எழுதியவர் : கனகரத்தினம் (13-Feb-15, 11:17 pm)
பார்வை : 201

மேலே