மாலை பொழுதிலொரு மகிழ் கனவு

அழகிய நந்தவனத்தில்
அந்திசாயும் நேரத்தினில்
குயில்சங்கீதம் இசைக்கையில்
நடைபயிற்சியில் நான்!!

ஆறு பெருக்கெடுத்தோட -அதில்
அலைகள் நடனமாட
இருகரையில் மலர்ந்த மலர்கள்
உதிர்ந்து வரவேற்றிட நான் கண்டேன்!

எங்கும் புசுமைகள்
சலனமில்லா அமைதி
கானமயில் தோகைவிரித்தாட
வானமழை வந்து அரங்கத்தில் கூட ...

நதி துள்ளும் மீன்கள் கரையேற துடிக்க
மதிகொண்ட கொக்குகள் இறையாக்க துடிக்க
சதிசெய்யும் மனிதர் வலைகொண்டு விரிக்க
கதியென்று மீன்கள் கவலையில் நதியினுளொளிய !

நர்த்தனமாடும் ஈசன் படியளக்க அவ்விடம் வரவே
நந்திகள் புடைசூழ பதியுடன் வரவே
ஒருசெல் உயிருமே தலைபணிந்து வணங்க
என்முன்னே இறைவந்து நிற்க !

வருங்காலம் எவ்வாறிருக்க வரம் வேண்டுமென வினவ?
அருள்கொண்டு பொருள் நிறைந்து அமைதிகண்டு
அடுத்தவர் பொருளுக்கு ஆசைகொள்ளாது
உழைத்தவை மட்டும் நிலைத்திருக்க அருள்கவென்றிட...

புன்னகைத்தார் ஈசன் மெல்ல ...
தன்வருங்காலம் பற்றி யோசிக்காது
உலகோரை பற்றி யோசிக்கும் மனிதர்கள் குறைவு
இருந்தாலும் இன்னுமொரு வரம் தரவிரும்புகிறேன் கேள் ?

இறைவா எனக்கோர் ஆசை !
யாவரும் பிறக்கையில் வளர்வதில்லை ஆசை
ஆசை வளர்ந்ததால் நேர்கிறது துன்பம்
அடுத்த தலைமுறையை எண்ணியே சேர்க்கிறது சொத்து !

ஆதலால் ....
ஏழை பணக்காரனென்ற பாங்கு மேலோங்குது !
எனக்கொரு வரமாய் தாருங்கள் -அவரவர்
உழைக்கும் சொத்துக்கள் அவரது
வாழ்விருக்கும்வரை மட்டும் நிலைத்திருக்கவும்
அவருடனே அது மறைந்துபோகவும் அருளுங்கள்!!

ஈசன் யோசிக்கலானார் ...
ஏனிந்த வரமென்று என்னிடம் வினவினார் ?
நானும் உரைத்தேன் ...
தன் வாழ்நாளறியா பிறவி மனிதன் !

ஆதலால்...
சேர்ப்பதும் குறையும் அதனால்
பலருக்கு நன்மையையும் விளையும்
உலகெங்கும் உழைப்பின் மேன்மையோங்கும்!
உழைப்பறிந்த மனிதனிடமே மனிதம் தங்கும்!

தர்மம் செழிக்கும் இயற்க்கை வளமாயிருக்கும் !
இப்போதிருப்பது எப்போதும் நிலைக்கும் !
எத்தனை தலைமுறை வந்தாலும் நான்பெற்ற
இன்பத்தின் பயனை அனுபவித்து இன்புற்றிருக்கும் !

ஈசனும் மகிழ்ந்தார்
வேண்டிய வரமதை தந்தார்
மகிழ்ச்சியில் நெகிழ்ந்தேன்
திடுமென விழித்தேன் கடற்கரை மணற்பரப்பில்...!!

வேலைக்கு அலைந்து கிடைக்காமல்
உறங்கியதறியாமல் திகைத்தேன்!
உறவுகளிருந்தும் உதவிட மனமின்றி தவித்து களைத்து
சோர்வினில் உறங்கியவன் கண்ட கனவு !

எழுதியவர் : கனகரத்தினம் (14-Feb-15, 2:26 am)
பார்வை : 87

மேலே