விட்டு விடு மயக்கம் தீரவே

விட்டு விடு மயக்கம் தீரவே!
உனக்காகத்தான் நான்
வாழ்கிறேன்.கண்களில்
நீராகிறேன்,இதயத்தில்
நினைவுகளை கடன்
வாங்கினேன்,உன் மூச்சினில்
உயிர் வாழ்கிறேன்.

சோலைகளில் பூ பூக்குது
உன் புன்னகையினால்,
நிலவும் பாதை மறந்தது
உன் பாதம் பின் வந்ததால்.
நானும் தொலைந்து போனேன்
உன்னைக் கண்டதிலிருந்து,

அழகுக்கு அவள் இலக்கணம்.
காதலுக்கு நாம் காவியம்.உன்
கண்கள் கண்டால் வார்த்தை
மழலையாகுது.
இதயம் உடைந்து போனது.

நீ தனிமையில் மஞ்சக்காட்டுக்குள்ள
ஒளிந்திருக்கிறாய். நானும் உன்னோடு
தான் இருக்கிறேன் உன் மனதினுள்,
என்னை விட்டு விடு மயக்கம் தீரவே!

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (14-Feb-15, 11:42 pm)
பார்வை : 92

மேலே