காதலர் தினத்தன்று பிறந்த இந்து டியருக்கு வாழ்த்துக்கள்
நீ பிறந்த தினத்தை
உலகம் கொண்டாட
நல்லாசி வழங்கிய
இறையை வணங்குகிறேன்!!
அன்பு ஆசை நட்பு காதல்
பண்பு பாசம் துய்மை ஸ்பரிசமென்று
ஒன்றிகிடக்கும் ஒருநாளம்!
உலக காதலர்களின் திருநாளாம்!!
இன்று பிறந்தாய் நீ !
அன்று பிறந்ததால்
காதலர் தினமானதோ-இல்லை
உன்மேல் இறைகொண்ட காதலால் அதுவானதோ !
எதுவாயினும் உலகம் கொண்டாடும்
உந்தன் பிறந்தநாளை -நீயும்
அதிர்ஷ்ட தேவதையே ஆனாய் பெண்ணாய்
அழகு பொங்க வாழ்க வாழ்கவே !!