என் மதியே
மனதோடு மழைக்காலம்
கண்களோடு கனாக்காலம்
உன்னை காதலித்ததிலிருந்து........
விழியில் விழுந்த தூசிபோல
கருவிழியில் கலந்தாய் காதலே.......
உன் மனதோடு தான்
என் மனமும் இருக்கிறது.....
கடந்து வந்த பாதையில்
காதலை பிரிந்ததால்
மரணம் மட்டுமே தீர்வாகாது.....
மறுஜென்மத்தில்
மறுபடியும் உன்னை கண்டால்
மறவேன் மதியே.....!என் முழுநிலவே......!!!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
