பழைய கேள்வி
யார் கடந்த
ஆறு.....
தன்னை கடக்கும்......?
அல்லது தான் கடந்த
ஆறு
எங்கே கிடைக்கும்?
-------------------------------------
தற்கொலைக்கு
முயற்சித்துக் கொண்டே
இருக்கிறது
இந்த மலை உச்சி.....
-----------------------------------------
சுவர் உடைத்த
நாளில்
சிறை உடைந்தது
'வெளி'
-----------------------------------------
வாடாமலே
உதிர்கையில்
என்னவாகிறது
பூக்கள்?
-----------------------------------------
திரும்பிக் கொண்டே
முடிந்த வளைவில்
திரும்பாமலே
கிடக்கிறது
ஒரு வளைவு.....
-------------------------------------------
கவிஜி