நெஞ்சத்தைக் கிள்ளாதே
அவனது முதல் நாவல்
சாகித்திய அகாதமி
விருது பெற்றபோது
அவன் சிரித்தான்..
கனவோ இது என்று
கிள்ளிப் பார்த்தான்..
உண்மைதான்..
வலிக்கவில்லை..
கனவுதான் ..
எழுந்து போய்
தேநீர் போட்டுக்
குடித்துவிட்டு
வந்து படுத்தான்..
பிரதமர் ஆகிவிட்டதாய்
அடுத்த கனவு..
கிள்ளிப்பார்க்க நினைத்தான்..
நெஞ்சத்தைக் கிள்ளாதே
என்று பாட்டு ஒலித்திட
சிரித்தான்..!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
