நீலக்குயில் தேசம்22---ப்ரியா

ராஜலெட்சுமி குடும்பம் சேருவதற்கு இதுவே சரியான தருணம் என்பதை நன்கு உணர்ந்து கொண்ட சுசீலா தன் மனதில் பட்டதை மாமாவிடம் கூறினாள்......ஓடி போன ராஜலெட்சுமியின் மன கஷ்டத்தை புரிந்துகொண்டவள் இவள்தான் என்னதான் அவள் கணவன் குழந்தைகள் என்று சந்தோசமாய் இருந்தாலும் தன் பெற்றோரை இழந்து படும் வேதனையை இவள் முதல் நாள் ராஜூவிடம் பேசும் போதே தெரிந்து கொண்டாள் மாமாவின் பிடிவாத குணத்திற்காக இதுவரை சேரமுடியாமல் இருந்தது ஆனால் இன்று மாமாவே அதற்கான சூழ்நிலையை உருவாக்கிக்கொண்டதில் மகிழ்ச்சி அடைந்தாள் சுசீ..........ஆனால் சுசீலாவை விடவும் அதிக அளவு மகிழ்ச்சியில் ஆழ்ந்தவர் அவர்தான் ஆனாலும் அவரது முகபாவனையில் இவளால் அதை தெரிந்து கொள்ளமுடியவில்லை.

ஏதோ சாமியார் சொன்னதுக்காக மட்டுமே ராஜலெட்சுமியை இங்கு வரவழைத்து நம் குடும்பத்தோடு சேர்த்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்திருப்பது போன்று பேசிக்கொண்டார் மாமா.........எல்லாம் நம்ம கயல் குட்டிக்காகதான் இனி என்னபண்ணமுடியும் நீ சொல்றதும் சரிதான் அவளை சேர்த்துக்கொள்ளலாம்......நீயே அவள் குடும்பத்தை வரசொல் என்று சொன்னார் கயலின் தாத்தா...இந்த பதிலுக்காகவே காத்துக்கொண்டிருந்த சுசீலா சரி மாமா உடனே சொல்றேன் என்று ஆனந்தக்கண்ணீரில் மூழ்கியவள் கயலுக்கு முதலில் அழைப்பைக்கொடுத்து இங்கு நடந்தவற்றைப்பற்றி சொன்னாள்.

ஒருநிமிடம் அந்த சாமியாருக்கு கண்களை மூடி நன்றி சொல்லிக்கொண்டாள் கயல்.

சரிமா நீங்களே அத்தைக்கு கால்பண்ணி விஷயத்தை சொல்லுங்க....எனக்கு இன்னிக்கு ஸ்பெஷல் கிளாஸ் உண்டு நான் வருவதற்கு லேட்டாகும் என்று சொல்லிவிட்டு அழைப்பைத்துண்டித்தாள்.

தனது தோழிகள் மற்றும் காதலன் ராகேஷுடன் அன்று மாலை கடற்கரைக்கு சென்றாள் கயல்.......அங்கு மணலில் நால்வரும் அமர்ந்து பேசிக்கொண்டிந்தனர் அப்பொழுது...... "காலம் மிக வேகமாக செல்கிறது" இல்ல ராகேஷ் நேற்றுதான் கல்லூரியில் காலடிவைத்த மாதிரி இருந்திச்சி அதுக்குள்ளால 3 வருடங்கள் முடியும் நிலைக்கு வந்துவிட்டோம்........அப்பா என்ன பாஸ்ட் என்று சொல்லி பெருமூச்சு விட்டாள் கயல்.

ஆமாடி என்று பதிலுக்கு அவன் சொல்ல.......அவன் பேச்சில் வருத்தம் நிறைந்திருப்பதை நன்றாக உணர்ந்தாள் கயல் அவனது கையைப்பிடித்து ஏய் திருடா என்ன டல்லா இருக்கா..? மேற்படிப்பையும் நாமெல்லாம் ஒரே கல்லூரியில் தொடரலாம் என்று அவனிடம் செல்லமாய் பேசி நம்பிக்கைக்கொடுத்தாள்.

சேர்ந்து படிக்கலாம் பட் நம்ம அஜி நம்ம கூட படிப்பை தொடரமாட்டாள் என்று ஷீபா பேச....சும்மா இருடி என்று அவளை தடுத்தாள் அஜி.

ஏன்டி அவள தடுக்குற என்ன விஷயம் சொல் என்றாள் கயல்விழி........அது ஒன்னுமில்லடி இவ டிகிரி முடிச்சதும் திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் நடக்குது உடனே திருமணம் தான் என்றதும் தன ஒரு தோழி விரைவில் நம்மை விட்டு பிரியப்போகிறாள் என்றதும் ஒரு நிமிடம் அப்படியே திகைத்துப்போனாள் கயல்......கயல் மட்டுமல்ல ஷீபாவும் தான்......!

தோழிகளின் உரையாடலில் தானும் சேர்ந்து தன் பங்குக்கு கலாய்த்து கொண்டிருந்தான் ராகேஷ்.

அப்போது தோழிகளில் ஒருத்தி.....கயலின் கனவுக்காதலன் தான் ராகேஷ் என்பதை உளறிவிட்டாள்.

தன் பார்வையால் அவளை மேலே பேச விடாமல் அடக்கினாள் கயல்.......காரணம் சாமியார் கனவு பற்றி யாரிடமும் பேசக்கூடாது என்று சொன்னது திடீரென நினைவுக்கு வந்தது. என்னடி சொல்லு சொல்லு....என்று நச்சரித்தான் ராகேஷ்.

அது ஒண்ணுமில்லடா சும்மா உன்ன என் கனவுல பார்த்தேன்னு சொன்னேன்னா அதான் அவளுங்க கலாய்க்கிறாங்க என்று எப்படியோ சமாளித்தாள்.

கடலில் அலையில் கால் நனைத்து விளையாடிக்கொண்டிருந்த சமயம் மாலை வேளையில் அந்த மிதமான காற்றோடு இவளின் வாசம்(சாமந்திப்பூ)கலந்து இன்று வழக்கத்தை விடவும் அதிகமாய் வாசம் தந்தது.

அவளது உடம்பில் இயற்கையாகவே சாமந்தி வாசம் இருக்கிறதா?இல்லையா என்பது தோழிகளுக்கு அடிக்கடி வரும் சந்தேகம்.....அது உண்மையாகவே இருக்கும் வாசம் என்று இன்று நன்கு புரிந்துகொண்டனர்.கயல் உடம்போடு கூடிய அந்த சாமந்திப்பூவின் வாசம் ராகேஷை ஏதோ செய்தது மனதை நிலைக்கொள்ளாமல் கிறங்க வைத்தது....பழகி இத்தனை நாட்கள் ஆகியும் தவறான எண்ணத்தில் இவனது சுண்டு விரல் கூட அவள் மீது பட்டதில்லை ஆனால் இன்று அவன்அந்த வாசத்திலும் அவளது அழகிலும் எல்லை மீறி தன்னையும் மறந்து அவளை அள்ளியணைத்து அவள் கன்னத்திலும் உதட்டிலும் இதழ் பதித்தான்.....???

தோழிகள் கண்டுக்காததுபோல் அவர்கள் பாட்டுக்கு நின்றுகொண்டார்கள்

இதை சற்றும் எதிர்பாராத கயல்விழி அவன்பிடியை தளர்த்தி வெளியில் வர முயற்ச்சித்தாள் முடியாததால் கோவம் அனலாய்வீச முழுபெலத்தையும் கைக்கு கொடுத்து அவனை பிடித்துத்தள்ளினாள் கோவம் தாங்காமல் அவனது கன்னத்தில் பளாரெனெ ஒன்னு கொடுத்துவிட்டு அங்கிருந்து அந்த இடத்தைவிட்டு வேகமாய் நகர்ந்தாள் கயல்விழி...........!

__________________________________________________________________________________________________________________________________

அண்ணன் வேலைசெய்யும் இடமும் தாத்தா ஊரும் பக்கம் பக்கம்தானே அம்மா ஒருமுறை அங்கு சென்று தூரமாய் நின்றாவது தாத்தா குடும்பத்தையும் கயல்விழியையும் பர்த்துட்டுவரலாம் அம்மா ப்ளீஸ் ப்ளீஸ்........என்று ராஜலெட்சுமியை நச்சரித்துக்கொண்டிருந்தாள் ப்ரியதர்ஷினி.

ஏன்டி இப்டி கொல்ற.....எனக்கு மட்டும் ஆசை இல்லையா என்ன? நான் மட்டும் முடிவு பண்ணினா போதுமா? உன் அப்பாக்கிட்ட கேட்காம திடீர்னு எப்டி கிளம்புறது.........அப்பாக்கிட்டதானே நான் பெர்மிஷன் கேட்டுக்கலாம் இப்போ நீங்க முடிவு சொல்லுங்க??????என்று ப்ரியா கேட்டுக்கொண்டிருக்கும்போதே அவளது செல்போன் ஒலித்தது.......

ஐ அத்த கூப்பிடுறாங்க என்று சொல்லி போனை தாயிடம் கொடுத்தாள்........ராஜலெட்சுமியிடம் சுசீலா வீட்டில் நடந்த விஷயங்கள் கூறிவிட்டு........எப்போ கிளம்புறீங்க நீங்க மட்டுமில்ல அண்ணன்.......என் மருமகன் மருமகள் எல்லாரையும் அழைச்சிட்டு வரணும் சீக்கிரமா சொல்லுங்க என்றாள் சுசீ....?மௌனமாய் நின்றாள் ராஜூ.......ஏன் என்ன ஆச்சி பேசாம இருக்கா?என்று மறுபடியும் ஹலோ ஹலோ என சுசி கேட்க?

ஹலோ என்று டல்லாக பேசினாள் ராஜூ...........அண்ணி என் கணவரிடம் கேட்காமல் உடனே கிளம்ப முடியாது அவங்க வந்த பிறகு முடிவெடுத்துட்டு சொல்றோம் என்று சொன்னாள்.

அண்ணன் மேல எனக்கு நம்பிக்கை உண்டு ஒன்றும் சொல்ல மாட்டார் எவ்ளோ சீக்கிரம் வர முடியுமோ அவ்ளோ சீக்கிரம் வாங்க என்று சுசீலா உற்சாகமாய் பேசினாள்.......ஆனால் ராஜூ கவலையில் இருந்தாள்.

அம்மா ஏன் ஒருமாதிரி இருக்கீங்க அத்தை என்ன சொன்னாங்க என்று கேட்டாள் ப்ரியா.

அதுவா...நம்மள குடும்பத்தோட கூப்பிடுறாங்க தாத்தா கூப்பிட சொல்லிட்டாராம் உடனே கிளம்பி போக சொல்றாங்க என்று பதில் சொன்னதுதான் தாமதம் சிறு பிள்ளைப்போல் துள்ளிக்குதித்தாள் ப்ரியா அம்மாவையும் கட்டிக்கொண்டாள்.

நல்ல விஷயம்தானே அம்மா இதுக்கு ஏன் இப்படி உம்முன்னு இருக்கீங்க.......ம்ஹும் நம்ம குடும்பம் ஒன்னு சேருறது புடிக்காத மாதிரி இருக்கீங்க என்று கிண்டலாய் கேட்டாள்...........நீ கேட்டாலும் கேட்காட்டியும் இதுதான் உண்மை என்று குண்டைத்தூக்கிப்போட்டாள் ராஜலெட்சுமி...?????

ஏன்மா?உங்களுக்கு தாத்தா பாட்டியைப்பார்க்க.......நீங்க பிறந்த ஊருக்கு போக இஷ்டம் இல்லையா என்று கேட்டாள்?

இல்லை என தலையசைத்தாள் அவள்.....எல்லாம் கூடி வரும் நேரத்தில் நீ மட்டும் ஏம்மா இப்டி பண்றா என்று கோவித்தாள் ப்ரியா.

உனக்குத்தெரியாதுடி இதெல்லாம் பெரியவங்க விஷயம் அப்டிதான் இருக்கும் என்று தீர்க்கமாய் ஒரு வில்லியைப்போல் பேசினாள் ராஜூ......!

என்னம்மா பேசுறீங்க புரியும்படி சொல்லுங்க என்று கோவித்தாள் தன் தாயிடம்........சொல்றேன்டி கேளு என்று பேசத்தொடங்கினாள்.

அன்னிக்கு உன் அப்பாக்கூட என்ன சேர்த்துவைக்கமாட்டேன்னு தாத்தா அப்டி கத்தினார் அப்பாவோட ஏழ்மைய சுட்டிக்காட்டி தரக்குறைவா பேசினார்.....அதனால திருட்டுத்தனமா ரெண்டுபேரும் திருமணம் பண்ணிட்டு முதல் இரண்டு வருடம் ரொம்ப கஷ்டப்பட்டோம்.....எங்கெல்லாமோ சுத்தி சுத்தி கஷ்டப்பட்டு வயிற்று பிழைப்பை நடத்தி வந்தோம், அப்புறம் ஒருநாள் கடவுள் புண்ணியத்துல ஒரு மகான் வந்து வீட்டு வாடகையும் வாங்காம அவரோட ஏற்பாட்டுல அப்பாவ வெளிநாட்டுக்கு அனுப்பி வச்சாரு......அப்பாவோட உழைப்பால 2,3 வருஷத்துலயே நல்ல நிலைமைக்கு வந்துட்டோம்.......நான் பட்ட கஷ்டமும் தாத்தா தரக்குறைவா பேசினதையும் மனசுல வச்சிட்டு இன்னும் நல்லா முன்னேறணும் நிறைய சம்பாதிக்கணும் பணம் பணம் பணம் தான் தேவை எல்லா இடத்துலயும் சொத்து வாங்கிப்போடணும் எல்லாரும் புகழ்ந்து பேசுற அளவுக்கு முன்னேறணும் அதுவரைக்கும் நம்ம ஊருப்பக்கமே தலைக்காட்டக்கூடாதுன்னு அப்பா அடிக்கடி சொல்லுவாருடி........அதான் என்று விம்மி அழுதாள் ராஜலெட்சுமி..........!

சாதுவான நம் அப்பாவுக்குள்ளும் இப்படி ஒரு உறுதியான இலட்சியம் இருக்குதா?????என்று நினைத்து அப்படியே அசந்து போய் நின்றிருந்தாள் ப்ரியா.......


தொடரும்........

எழுதியவர் : ப்ரியா (18-Feb-15, 10:00 am)
பார்வை : 225

மேலே