எழுதுவது எப்படி

எழுதி எழுதித் தான்
எழுத்தைத்
தெரிந்து கொள்ள வேண்டும்..
வேறு வழியில்லை ..!
என்ற நகுலனின்
வரிகளில்
நம்பிக்கை வைத்திட..
எழுத்து
புரிகிறது..
எழுத
வருகிறது....
எழுதுவது ..
எதற்கென்று தெரிகிறது..
எழுதுவது எத்தனை
கடினமென
நன்றாகவே புரிகிறது..
தலையில் எழுதியதும்
சுலபமாய் புரிகிறது!

எழுதியவர் : கருணா (18-Feb-15, 6:09 pm)
பார்வை : 492

மேலே