செல்லிடத் தொலைபேசி நுண்ணறிபேசி கைபேசி

நித்தம் நித்தம் உன்னை நோக்கினேன்
மேலும் கீழும் ஆராதித்தேன்
கொஞ்சவும் கெஞ்சவும் செய்தேன்
என் ஆதியும் அந்தமுமாயிருந்தாய்
என் ஆடை பொலிவு இழந்தாலும்
உன் பொலிவு இழக்கா பார்த்தேன்
எனக்கும் பலருக்கும் நீயே
வழிப்போக்கனாகவும் விழிப்போக்கனாகவும்
இருக்கிறாயே
உலக வாழ்வியலில் வெற்றியும் தோல்வியும்
பலமுறை மாறி மாறி வரும்
ஆனால் உன் வாழ்வில் மட்டும் தான்
இரண்டும் ஓரே முறை தான் கிட்டும்
=== க.பிரபு தமிழன்