காதலாலே
எண்ணமெல்லாம் நீதானே
அருகே உனக்கோர் நிழலானேன்...
இருள் படிந்த உன் கூந்தலில்
வெளிச்சம் வீசும் அந்த கண்களில்
மடிந்துவிட்டேன் காதலாலே...
முற்றுப் பெறாத உன் பேச்சுக்களில்
நான் இன்று ஊமையானேன்...
நீ வாசல் முன்னிட்ட கோலத்தில்
நான் வாசமானேன்...