பயிற்சி பெறுக கவியாக்கம் 3

தோழமைகளே
எனது உரைநடையாக்கத்திற்கு தோழர் காளியப்பனார் அளித்த மரபு வகைமையைக் வாசித்து மகிழுங்கள் :

மலரை மழையை மழலையை
நிலவை நீள்விசும்பை பசும்புல்லை
உறவை ஊரை கனவை காதலை
அவனை இவனை........
எதைப்பற்றியும் ஏராளாமாய்
எழுத்துக்களை அடுக்கி
சொற்களை செதுக்கி
கவிதைகள் படைத்தேன் தாராளமாய்..

கவிதை என்னைக் கேட்டது
"என்னைப் பற்றி உன் கவிதைகளில்
எழுதுவது எப்போது....?"

===============================================இனி காளியப்பனார் அளித்த மரபாக்கம்

காளியப்பன் எசேக்கியல் • 30-Nov-2013 6:39 am

மறு பார்வை தந்த கருத்து:

எழுதும் பொருட்கள் தமைப்பற்றி
=எடுத்துக் கூறிச் செலனினைத்தேன்!
அழுது கவிதை எனைப்பார்த்தே
=அரற்றும் சொற்கள் நிறுத்தியது!
பொழுது போகாப் பலபேர்கள்
=பித்த னாக உன்பேரில்
எழுது கின்றார் போதுமது;
=எனக்குன் ஒருவன் போதாதே!

எழுதியவர் : அகன் (18-Feb-15, 10:28 pm)
பார்வை : 54

மேலே