ஓவியத்தின் தூரிகை ஓவியம்
..."" ஓவியத்தின் தூரிகை ஓவியம் ""...
இங்கே ஓவியமொன்று சிறு
தூரிகைகொண்டே வெகு
லாபகமாயொரு சித்திரம்
வரைந்து தன்னை நிசமாக்கி
வரைகலையை நிழலாக்கி
பின்னலிட்ட தையலிவள் !!!
கண்ணாடி வளையலிட்டே
மின்னுகின்ற பதுமையிவள்
கயல் கண்களால் காதல்பேச
அவள் காதோரத்து கம்மலும்
உதட்டோரத்து சிறு மச்சமும்
மச்சானை கொஞ்சம் மயக்குதடி !!!
மங்கலமாய் மஞ்சள் நிறத்து
ரவிக்கையும் சேலையுமாய்
செக்கச்சிவந்த வதனத்தில்
அச்சத்தோடு அந்த மூன்றும்
சேர்ந்தவாரு மஞ்சத்திலிவள்
கொஞ்சியே கொல்கின்றாள் !!!
தன் பச்சருசிப்பல் மறைத்து
மெளனமென்னும் மொழியால்
பூச்சரங்கள் தொடுத்தாற்போல்
மான்விழியை வில்லாய் விரித்து
காதலின் காதலாய் அம்(ன்)பு
கணைகள் என்மேல் எய்கிறால் !!!
என்றும் உங்கள் அன்புடன்,,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்...