அன்னையர் தினம்

அன்னையர் தினம்

(என் பிறந்த நாளில் எழுதிய இக்கவிதை அன்னைக்கே சமர்ப்பணம்)

பத்து மாதம்
பத்திரமாய் கருவில் வைத்தாயே
நித்தமும் என்னை நினைத்தாயே!

பிரசவத்தில் துடித்தது
நீயே !
நான் சவம் ஆகும் வரை
எப்படி மறப்பேன்
நானே !

பாலூட்டி பசியாற்றினாயே
பலமுறை என்னையே போற்றினாயே!

நான் நித்திரைக்கு சென்றிடவே
உனது நித்திரையை பலமுறை
கலைத்தாயே
அன்பையே மனதில் விதைத்தாயே!

அர்த்த சாமத்தில் நான் அழுததேனே
அழுப்பில்லாமல் கையால் அள்ளினாயே
அம்மா இதோ வந்துவிட்டேன்
என்று சொல்லினாயே!

என் உடல்நிலை குன்றிடவே
உடனே கண்ணீர்விட்டு அழுதாயே
இறைவனையே விழுந்து தொழுதாயே !

உன் தாலாட்டு தானே
என் உதட்டில் தேன் ஊட்டுவது தானே !

அம்மா என்று முதலில் அழைத்தேனே
உவகையில் உள்ளமும் மலைத்தாயே
அக்கணமே கண்ணீரால் மனம் நனைத்தாயே!

மெல்ல மெல்ல
நடக்க முயற்சித்தேனே
பயிற்சி அளித்தே
அதில் என்னை தேர்சித்தாயே!

கருவிலும் நினைவிலும்
என்னை வளர்த்துவிட்டாயே
நீங்கா இடத்தை பீடித்து
என் மனதை தொட்டுவிட்டாயே!

இத்தனையும் எனக்கு செய்தவள் நீயே!
அதை உனக்கு எப்படி செய்ய போகிறேனோ நானே !

எதற்கு கொண்டாட வேண்டும்
பிறந்த நாள் எனக்கு
இதனையும் செய்த சிறந்த நாளே
இன்று உனக்கு!

ஆயிரம் ஆயிரம்
தினங்கள் வரலாம்
என் மனம் கொண்டாட துடிக்கும்
இத்தினமே
எனக்கு அன்னையர் தினம்
ஆம்
என் அன்னையின் தினம்!

எழுதியவர் : சபியுல்லாஹ் (19-Feb-15, 7:42 pm)
Tanglish : annaiyar thinam
பார்வை : 411

மேலே