எரிமலையின் சீற்றமாய் எழுகிறேன்
எரிமலையின் சீற்றமாய் எழுகிறேன்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
எங்கிருந்து வீழ்தனோ
அங்கிருந்தே எழுகிறேன்
எரிமலையின் சீற்றமாய்
எழுகிறேன்...
சாதி மத இனப்
பிரிவினை ஒழித்து
சமத்துவ சமுகம்
அமையவே எழுகிறேன்...
வன்முறை முடக்கி
வான்வரை அன்பினால்
நிறைத்து நாம் வாழவே
எழுகிறேன்...
நாடக அரசியல்வாதிகளின்
வேசம் களைக்கவே
புரட்சித் தீ குடித்து
எழுகிறேன்...
இச்சை வெறி பிடித்து
பெண்களை சீரழித்த
நாய்களின் பிறப்புறுப்பை
வெட்டவே எழுகிறேன்...
கட்டிட காடுகளுக்கிடையே
ஒரு பச்சை காடுகளும்
வேண்டுமென்று பசுமை
வளர்க்கவே எழுகிறேன்...
கருப்பு பணம் ஒழித்து
அதில் ஏழைக்கு பசியாற்றும்
வெள்ளை மனம்
வளரவே எழுகிறேன்..
செந்தமிழ் நாவில் பழகி
பைந்தமிழ் முழுக்க பருகி
கலப்படமில்லா தமிழ்
வளர்க்க எழுகிறேன்...