அம்மா இப்படி புலம்பலாமா
ரசித்து ரசித்து படித்து
நினைத்த வேலைக்கு செல்லமுடியாமல்
கிடைத்த வேலையை செய்து கொண்டு
வருடங்கள் பல ஓடிவிட
நாம் நினைத்த
பிடித்த வேலைக்கான படிப்பை
மகனைப் படிக்கச் சொன்னால்
நம் விருப்பத்தை
அவர்களிடம் திணிக்கிறோம் என்ற
அவப்பெயர் வேறு
சரி
அவனாவது
அவன் நினைத்த படிப்பை படிக்கட்டுமே!
நிறைவேற்றுவோமா?
நம் விருப்பங்களை
யாரிடம் தான் காட்டுவது?