நம் இறுதி சந்திப்பும் உன் நினைவும் 555

உயிரானவளே...
நீ என்மேல் கொண்ட காதலை
என்னிடம் சொல்லும் போது...
உனக்கு நான் கொடுத்தது
மௌனம் மட்டுமே...
உன்னிடம் நான் காதல்
சொல்ல வந்த நேரம்...
நீ புன்னகையோடு என்னை
நோக்கி வந்தாய்...
சொல்ல வந்த காதலை
உன்னிடம் சொல்லும் முன்னே...
நீ உதிர்த்தாய்...
காதலை ஏற்கல
நட்பையாவது ஏற்பாயா என்று...
நானோ வார்த்தைகள்
இருந்தும் மௌனம்...
இதழ்கள் பிரிந்தும்
வராத வார்த்தைகள்...
வினாடி வெளிவர
துடித்த கண்ணீர்த்துளி...
மௌனத்தால் காயப்பட்டது
உன் இதயம்...
வலியை நான்
அனுபவிக்கிறேன் இன்று...
நீயும் நானும் சந்தித்த நம்
கல்லூரியின் இறுதி சந்திப்பு...
சேமித்து வைத்திருக்கிறேன்
வினாடிகள் ஒவ்வொன்றையும்...
உன் நினைவுகளையும்
அழிக்க முடியாமல்.....