என்னில் ஓயாத உன் நினைவலைகள் 555

என்னவளே...

மாலை கதிரவன்
மறையும் வேலை...

சில்லென வீசும்
தென்றல்...

அழகிய மணற்பரப்பில் அமர்ந்து
நாம் அலைகளை ரசித்தோம்...

என் விரல்களை
இருக்க கோர்த்து பிடித்து...

நீ உதிர்த்த வார்த்தை...

ஓயாத இந்த
அலைகளை போல்...

நம் காதல் அலைகளும்
ஓயபோவதில்லை
வாழ்நாளெல்லாம் என்றாய் ...

இன்று கைகோர்த்து நடக்கும்
காதல் ஜோடிகளை பார்த்துகொண்டு...

ஓயாத அலைகளையும்
ரசித்துக்கொண்டு...

நான் தனிமையில்...

அலைகள் மட்டுமல்ல...

இன்றுவரை
எனக்குள் இருக்கும்...

உன் நினைவலைகள்
கூட ஓயவில்லை.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (19-Feb-15, 9:38 pm)
பார்வை : 1251

மேலே