இறைவனிடம் சிறு கோரிக்கை

இரு விழிகள் இழந்து
இருள் வழியில் விழுந்து
இடிந்து போனவர்கள்
எத்தனை பேர்!

கால்கள் இரு இழந்து
கல்லாய் நகராது கிடந்து
கதறுபவர்கள்
எத்தனை பேர்!

சிறுநீரகம் செயலிழந்து
கழிவே உடலில் வளர்ந்து
மருத்துவமனையில்
தினம் கழிப்பவர்கள்
எத்தனை பேர்!

பெயரிடாத நோய்கள் வந்து
பேரிடராய் வேதனை தந்து
மெழுகு சுடராய் கரைபவர்கள்
எத்தனை பேர் !

இத்தனையும் பார்த்துவிட்டு
ஒன்றும் தரவில்லையே
இறைவனையே மனம் ஏசுகிறது
பலி தீர்த்துவிட்டு

பல கோடியே கொடுத்தாலும்
உங்கள் இருவிழியை கொடுப்பிரோ ?

தங்க மலையே தந்தாலும்
இரு கரங்களைதான்
தகர்ப்பிரோ?

மதிப்பில்லா உடலுறுப்பை
இறைவன்தான் அளித்தானே
அவனைத்தான் பல பேசியே
தினமும் நீங்கள் பலித்தீரே!

இறுதிவரை ஏழ்மையிலே
தவித்தாலும்
இறைவா புன்முறுவாய் ஏற்கின்றோம்

இதனை போல் வேதனை தந்து
தினம் மனம் நொந்து
வருகின்ற சோதனையை
தந்துவிடாதே !

எங்களை விட்டு என்றுமே
சென்று விடாதே !

அழகு வேண்டாம்
பணம் வேண்டாம்
பேர் புகழ் எதுவும் வேண்டாம்
இறைவா வரம் வேண்டும்
உடல் நலமே
என்றும் என்றும்!

எழுதியவர் : சபியுல்லாஹ் (20-Feb-15, 9:54 pm)
பார்வை : 166

மேலே