அனுபவத்தில் உணரும் அன்பு
“அழியாத உறவு – அன்பு”
மங்களமாம் மனைவியவள்
மனையிலேயே வீட்டிருக்க
மதிகெட்டுதான் போனேனடி
மதுகுடித்த மயக்கத்தால்...!
சில்லரையின் புத்தியிலே
சின்னதனமாய் எண்ணங்கள்
சல்லித்தனம் பண்ணிவிட
சறுக்கிதான் விழுந்தேனோ..?
கள்ளத்தனம் உள்ளேவைத்து
காமத்தையும் காதலென்று
கைபிடித்த செருக்கியவள்
காலைவாரி விட்டாளே..!
அன்புயெனும் ஆசைமுகம்
அழிவுக்கு அழைப்பதில்லை
அடிபட்டு உணர்ந்துவிட்டேன்
அறுபதிலும் அதனுறவை..!
உள்ளத்தை அடகுவைத்து
உனக்கெதிர் பாவம்செய்து
உடல்கொண்ட மோகத்தால்
உருக்குலைந்து போனேனே..!
மரியாதை தொலைந்துவிட
மானமது சிரித்துவிட
மந்திசொல்லும் பாடமதை
மனதுக்குள் கேட்கின்றேன்..!
வழுக்கிவிடும் வாழ்க்கைக்கு
வழிசொல்லு மதனுறவு
ஐந்தறிவாய் இருந்தாலும்
ஆறறிவை மிஞ்சுதடி...! சபாஷ்...!

