பயிற்சி பெறுக கவியாக்கம் 7

தோழர்களே

சில நிமிடங்கள் மட்டும் அளித்து மூவர் எழுதிய கவிதையும் அதற்கான கருத்துகளும் படைப்பாற்றலை இங்கு வளர்க்க உதவிய விதத்தை வாசிக்கலாம் இங்கு

மூவர் முயற்சி -4 அவிலமி

புல் மேயும் தரைகள்...!

சட்டங்கள்
சகதிகள் பூசிக்கொண்டு
சத்தியங்கள் செய்யும் அவலம்
சத்தங்கள் இல்லாமலே தொடர்ந்திட ,
சவுக்கடிகளோ பலமாக இயலாதவருக்கு !

வகுக்கப்பட்ட
வரைமுறைகளுக்குள் ,
வேற்றுமைகளுக்கே இடமுண்டு ;
வேலியே பயிரை மேயும் தடமுண்டு ;
வேஷதாரிகளுக்கே நீதிக்கான திடமுண்டு !

நீதிதேவதையால்
நிறுக்கப்படாத குற்றங்கள்
நிதிகளினால் விலையேற்றமாகும்
கையாலாகாதவர்களின் காட்சிபதிவுகள் ,
கைம்மாறு கருதும் சாத்வீக நெறிமுறைகள் !

- (புலமி)

நிறைய நிதியிருந்தால்
குறைந்த விலையில்
நீதிகள் நிறுத்து வாங்கும்
வீதிகள் விளையும்
நாடானது - நடப்பில்
கேடின்றி வேறென்ன ?

ஓட்டுப் பொறுக்கிகள்
ஓட - ஓட்டை உருவாக்கி
விலகி நிற்கும் அதே சட்டம்...
விட்டம் நீண்ட வட்டமாய்
நீள்கிறது - குற்றவாளி
நீயோ, நானோவெனில் !

என்னைக் காக்க
வேண்டிய வேலி,
எனக்கு பாதகமாகவும்
எதிரிக்கு சாதகமாகவும்
மாயமாக சாயுமெனில்
இத்தனை பெரிய
சட்டப் புத்தகங்கள்
வெற்றுக் காகிதங்களா ?

(-வினோதன் )

வில்லின் அம்புகள் நோக்கி
இலக்கு ஓடி வரவேண்டும்
விண்ணின் மோதல் விரும்பி
மண்ணின் கரிசல் உயர வேண்டும்....

ஆள்காட்டி விரலுக்கு மைப்பூச்சு
போதுமினி…
புல்லின் கூட்டம் இனி
தரை பரப்பை மேய வேண்டும்
தெரிந்துவிடும் அப்போது
அழுக்கும் அவலமும்
எதில் எங்கு என்று..

இதோ,
தரை மேயும் புல்லின் நுனிகளில்
பனித்துளிகள் இல்லை….
நெடிலாய் முளைத்த எழுத்துக்கள்..
எழுதிகொண்டுள்ளன இப்படி..

“கற்றவை பற்றவை..”
(அகன் )

------------------------------------------------------------------------------------------------------

இனி கருத்துக்கள்

hujaa •


நல்ல கரு
அதை எடுத்தியம்பிய விதம் மிகவும் அருமை.
நல்ல முயற்சி!
நல்ல பலன்!


bhanukl •
எங்கள் ஓட்டு (வெற்றி )மூவர் கூட்டணிக்கு

போதுமா கோசம் .......

அருமை அருமை





Pulami •
பலத்த கோசம் தான் நன்றி நன்றி...



agan •

தோசம்...தோசம்...!



KS.Kalai •

தோழரே.....மிக நன்றாக இருக்கிறது !
படைப்பாளிகளிடத்தில் உள்ள நெருக்கமும் படைப்பில் தெளிவாக மிளிருகிறது !
ஒரு பாடுபொருளை வேறு வேறு திசையில் இருந்து ஒரே கோணத்தில் பாடுவது அருமை !
கற்றவற்றைப் பற்றவைக்கும் உங்கள் பணி தொடரட்டும் !







Pulami
ஆழமான ரசனை கருத்தில் கண்டு மகிழ்ச்சி....



சரவணா •
எனக்கு கூட்டுக்கு ஆள் கெடைச்சிருச்சி.... வினோதகன்.... பட்டைய கெளப்பிட்டீங்க ... அருமை... அகன் ஐயா... உங்களுக்கு சொல்லவா வேணும்....?





priya k •
மூவர் கூட்டணி அருமை...



Pulami •
ஏல ப்ரியா ரொம்ப நன்றில...


Vinothkannan •
அவுங்க ஒரு பேங்க் அப்பிசர்.....மரியாத...மரியாத....


yathvika komu
வினோ ,புலமி கலக்கிடீங்க .சூப்பர்




Vinothkannan •

நன்றி யாத்விகா !




Pulami •
மிக்க நன்றி யாத்விக்க்கா.........




yathvika komu
நானும் வரலாமா?



agan • வந்திருக்க வேண்டாமோ...இத்தன நாழி...?

Pulami • 22-Jan-2013 8:52 pm

அதானே....இப்படி கேக்கலாமோ...


agan

படாது...கேட்கப் படாது...

agan •

இந்த தளத்திலே என் மேலே இம்பூட்டு பாசமா..? மூவர் புடிக்காத ஆளு யாரப்பா...?வா..வா..நாமலும் பழகி... பழகிப் பார்ப்பொம்..புடிச்சா நால்வர் கூட்டணி அமைப்போம் ...ஐவர் ..அறுவர்..
போவோமா...ஊர்கோலம்...
ஊரெங்கும் பாக்கோலம்..
பாடும் பொருளில் எல்லாம்
கூடும் புதிய சொற்கள்...
ஓடும் பழம் பாணி வகைகள்..
தேடும் என் விரல்கள் ஓயாது..
கூடும் நட்புத் தோள்கள் சாயாது....


Pulami •
"கூடும் நட்புத் தோள்கள் சாயாது"


Vinothkannan •

வெற்றி வெற்றி வெற்றி...மாபெரும் வெற்றி...பதிவான சில நிமிடங்களில் -6 மதிப்பெண்கள் வாங்கிய இந்த கவிதையை மனதார வாழ்த்துகிறேன் ! வழங்கிய தோழர்/தோழி க்கு எங்களது நன்றிகள் !


Pulami •

ஹஹஹஹ்ஹா ....
(வெற்றிச் சிரிப்பு )

எழுதியவர் : புவிகன் (புலமி -வினோதன் =அக (21-Feb-15, 4:07 pm)
பார்வை : 66

மேலே