நாய்க்காதல்

என்னவனே!
இன்று என்னை ஏமாற்றத் துணிந்து விட்டாய் நீ.

நீ கேட்டது என்னவென்று புரிந்தும் தெரிந்தே தொலைத்துவிட்டேன்
நான் என்னை உன்னிடத்தில்
அதன் பெயர் காதல்.

காதல் பேர்ச்சொல்லி காமலீலைகள் பல புரிந்திட வானவில் தோன்றிய வானம் நீயென்று அதிலே பறக்க ஆசைப்பட்டேன்.

காதல் பழக்கம் உனக்கு பலமுறை அனுபவம் இதற்குமுன் எனக்கில்லை அறிமுகம்
வானவில் நிரந்தரமில்லை
சில நிமிடங்களுக்கென்று
புரிய வைத்தாய்.

தூரலிட்ட மண் வாசனை நம் காதல் அதிலே ஆதவன் என்னும் காமப்பசி தோன்றி மறையும் வரை நம் பாசம் அவன் வந்து போனதும்
நம் காதலென்ற வாசம் தொலைத்துவிட்டாய்.

நாய் மூக்கின் மேல்
அழகிய வண்ணத்துப்பூச்சி நான் தெரிந்தே நாய்க்கு இறையானேன். இன்று புரிந்தது இறைத்தேடும்
உன் காதல் நிச்சயம் நாய்க்காதல்.

எழுதியவர் : அரிபா (22-Feb-15, 12:38 am)
பார்வை : 284

மேலே