ஜாக்கிரதை தமிழ் இனம் நாங்கள்
பகையுணர்வுக் கொண்டவன்
நீயென்றால் இன்றே என் தேசம் நோக்கி வா.
நான் என் நெஞ்சைக்
காட்டி நிற்கிறேன்
உன் கண் எதிரிலே.
உனக்கு வெறி இருந்தால் குத்திக் கிழித்திடு என் நெஞ்சை நேருக்கு நேராக.
மறைந்து நின்று முதுகில் குத்தாதே பெண்களைக் கொன்று பேயாட்டம் போடாதே.
அழுதழுது எங்கள் கண்களின் கண்ணீர் வடிந்துவிட்டது
இருந்தும் எங்கள் ரத்தத்தில் 'வீரம்-ஈரம்-தமிழ்' இம்மூன்றும் வடிந்துப் போகவில்லை, வடிந்துவிடப் போவதுமில்லை.
ஜாக்கிரதை! தமிழ் இனம் நாங்கள்.

