இரவின் பிடியில் - ப்ரியன்

இரவின் பிடியில் - ப்ரியன்

(திருமண வயது கடந்தவர்களுக்கு மட்டும்)

பஞ்சும் நெருப்பின்றி
பற்றி எரிந்திடும்
தனிமை...

ஆசையும் தவிப்பும்
அடங்காமல் கரைந்திடும்
நிமிடம்...

நெட்டிமுறித்து தலைமுடிகோதி
தீண்டாமை துரத்திடத்துடிக்கும்
கைகள்...

இரவின் நிசப்தத்தில்
உரையாட காத்திருக்கும்
இதழ்கள்...

குழந்தையாகி தன்னையே
கொடுத்திட தூண்டும்
அன்பு...

ஆண்மை பெண்மையை
மாற்றி சூட்டிடபார்க்கும்
இறுமாப்பு...

தாகமும் மோகமும்
தீர்த்திட வேண்டிடும்
வியர்வை...

தொலைத்ததாய் தேடிட
காத்திருக்கும் புரியாத
தேடல்...

விவரமறியா பிள்ளையால்
விரயமாகும் தூங்கா
இரவு...

மறக்க நினைத்தாலும்
நினைக்க மறக்காத
நினைப்பு...

படம் : நன்றி_ விமல்சந்ரன்.

எழுதியவர் : ப்ரியன் (23-Feb-15, 12:03 am)
பார்வை : 1441

மேலே