வழியில்லா வலி

மைதானப் புல்வெளியில்
மணிமணியாய் நீர்த்துளிகள்
வான்மழையினால் அல்ல அது
குப்புறப் படுத்திருந்த என்
விழிமேக மழைத்துளிகள்!

வயதான பின்னும் இன்னும்
ஓட்டுனராய் என் தந்தை
வாழ்க்கையின் வண்டி ஓட
என்னோடு தாயும்
தங்கையும் இருக்கையிலே!

பட்டங்கள் இரு கையில்
கிழக்கு முதல் மேற்குவரை
பகலவனின் வழித்துணையாய்
இரவெல்லாம் நிலவோடு
பேச்சுத் துணையாய்

இப்படியே எத்தனைநாள்
இன்னும் உண்டோ தெரியவில்லை!

நான் அமர்ந்திருக்கும்
இருக்கையிலே என் தந்தை
அமரவேண்டி ஏந்திவிட்டேன்
இரு கைகளை இறைவா உன்னிடமே!

எழுதியவர் : உமர் ஷெரிப் (24-Feb-15, 1:03 am)
Tanglish : valiyillaa vali
பார்வை : 136

மேலே