மின்விசிறி
மின்விசிறியாய் சுழன்றது காலம்...
தேவையை மைய்யமாய் வைத்து...
உலகம், உறவு, மற்றும் உணர்வை
விசிறியாய் அமைத்து,
உலகம் உறவுகளை முன் நிறுத்தி,
உணர்வுகளைத் தேடி,
அதைத் தன்பின்னாலேயே வைத்துக்கொண்டு
கேள்வியுடன் அலைக்கிறது.
வாழ்க்கைப் பொத்தானை அழுத்தும்போது
சுழற்சி நின்றுவிடுகிறது
மரணமாய்...