பிரிவின் வலி

எங்கோ பிறந்து
எங்கோ வளர்ந்த -இரு
இதயம் இணைந்த உறவு -இரு
கைகள் கலந்தப்பொழுது - புது
மழலை ஒன்றின் வரவு .......

மன்னவள் வந்த பொழுது
நெஞ்சில் பொங்கிஎழுந்த உணர்வு
சொல்லவரிகள் இல்லை
அந்த நெகிழ்வு ........

பிஞ்சு கைகள் பஞ்சு விரல்களாட்டும்
பொழுது மகிழ்வு -செல்லமகள்
முகம்சிந்து அழகு பால்நிலவு ....

சின்னமகள் பள்ளிச்செல்ல
நேரம்வந்தாச்சு -மகள்
கைப்பிடித்து நடந்தகாலம் மாறி -இன்று
கனவாய் அனைத்தும்போச்சு
அன்றுமுதல் பிரிவு உண்டாச்சு ......

வளர்ந்துநின்ற மகள் வயது
வந்தபொழுது-சிறு
கவலைப்பட்டது நெஞ்சம் - ஏனோ
ஒருபிரிவு அன்றும்......

காலம் ஓடிப்போச்சு-மகள்
கல்லூரியில் சேர்ந்தாச்சு
பட்டசுமைகள் அனைத்தும் -மகள்
பட்டம்பெற்ற பொழுது
பஞ்சாய் பறந்துப்போச்சு -பலர்முன்
மானம் உயர்ந்தாச்சு .....

மனம் தொடுத்தது ஒரு யுத்தம் -மகள்
தன்னோடு வாழ்ந்த காலம் மொத்தம்.....
செக்கச்சிவந்தது விழிகள் -அவள் செய்த
குறும்பை எண்ணி ,,,
பொழிந்த அன்பை தாங்கி .......
சொந்தம் கூடி - மகள்
புது ஒருபந்தம்
சேரும் பொழுது
கேள்விக்குறி ஒன்று -பதில்
கேட்கிறது கண்முன் நின்று ????

எழுதியவர் : சுடர்விழி.இரா (23-Feb-15, 9:50 pm)
Tanglish : pirivin vali
பார்வை : 313

மேலே