முன்னோரைப் புறக்கணிக்காதே
வானின் வண்ணம் பார்த்து
வானிலை அறிக்கை சொன்னோர்
- நம் முன்னோர்
சூரியனின் பெயர்ச்சியைக் கொண்டு
திசையைக் கண்டு உணர்ந்தோர்
- நம் முன்னோர்
சூரியன் இருக்கும் இடத்தைக் கொண்டு
நாழிகை சொன்னோர்
- நம் முன்னோர்
முன்னோரிடம் மூடநம்பிக்கை இருந்ததில்லை...
முன்னோரில் சில மூடர்கள் இருந்திருக்கலாம்...
உள் அர்த்தம் புரியாமல்
சொல்லியிருக்கலாம் சில செய்திகளை
அவர்தம் தலைமுறைகளுக்கு...
மனிதா! இனி நீ எடுத்துச்செல்லும்
செய்திகளாவது உன் தலைமுறைக்கு
அதன் நோக்கத்தை உணர்த்துவதாக இருக்கட்டும்.
முன்னோரைப் புறக்கணிக்காதே...