முயன்றால் நீதான் முதலில்
முயன்றால் நீதான் முதலில்....பிறர்
முன்னேறும் பாதை உன் வழியில்...!!
தயக்கமோ நடுக்கமோ இனி வேண்டாம்
தடைகளை உடைத்திட முடியும்...!!
இருக்குது சக்தி நமக்குள்ளே அந்த
இமயத்தை தூக்கிட முடியும்......!!
நாளை மனிதன் வெண்ணிலாவில் தேரை ஓட்டுவான் - என்று
நேற்று எழுதிய திரைப் பாடல் உண்மையானதே - எனவே
இருக்குது சக்தி நமக்குள்ளே - அந்த
இமயத்தை தூக்கிட முடியும்....!!

