குழப்பம்
பட்டு போன
மரத்தில் பறவையென
வெறுமையில் மனம்
வற்றிய குளத்தில்
மீனாய் துடிக்குது
தரிசு நிலத்தில்
தண்ணீர் தேடும்
கருவேல மரத்தின்
வேராக உள்ளம்
எதையோ தேடுது
பூமத்திய கோடாய்
சுழலுது நெஞ்சம்
துவக்கமோ முடிவோ
காணாத குழப்பத்தில்
திக்கற்ற நிலை