காய்கறி உணவு சாப்பிடுபவர்கள்
``காய்கறி உணவு மட்டும் சாப்பிடுபவர்கள் கையைத் தூக்குங்கள் " என்றார் ஆசிரியர் .அப்போது புலால் சாப்பிடும் ஒரு பையனும் கையைத் தூக்கினான். .சக மாணவர்கள் எல்லோரும் கோரசாக `` சார் இவன் ஆடு மாடெல்லாம் சாப்பிடுவான் " என்றார்கள் `உண்மையா" ஆசிரியர் கேட்டார்
`` ஆமாம் "
``பின் ஏன் கையைத் தூக்கினாய் "
``இப்போதும் சொல்கிறேன் காய்கறி உணவு சாப்பிடுகிறவன் தான், நான்"
``என்னப்பா சொல்ற" .
``சார் டாக்டர் மருந்தை ஒரு ஊசி வழியா உடம்புல போடுறார் இல்லையா"..
``ஆமா "
``ஒரு ஊரில இருக்கிற சரக்கை வேறு ஊருக்கு வண்டி வழியா கொண்டுபோறோம் இல்லையா."
``ஆமா"
``அதைப் போலத்தான் நான் காய்கறிகளை மட்டும் தின்னும் ஆட்டையு மாட்டையும் தின்னாலும் .நான் சாப்பிடுவது புலால் இல்லை.....புலால் மூலமாக காய்கறிகளைச் சாப்பிடுகிறேன்".