ஆடுகளம்
பந்துகளும்
மட்டைகளும்
மாறி மாறிப்
பேசிச் செல்கின்றன
அடிப்பவர்களும்
பிடிப்பவர்களும்
அவர்களுக்கு
நீதி கூறுபவர்களும்
இவற்றையெல்லாம்
வேடிக்கை
பார்ப்பவர்களும்
அவ்வப்போது
வந்து
போய்க்கொண்டே
இருக்கிறார்கள்.
யார் இவர்கள்
எப்போது வருவார்கள்
எப்போது
செல்வார்கள்....
எதையுமே
சிந்திக்காது
ஆடாது அசையாது
அமைதியாகக்
கிடக்கிறது
ஆடுகளம்
என்றுமே
நிரந்தமாக.......