மீண்டும் உன் மடி பூக்க

நீ அமர்ந்த திண்ணைக் கூட
ஆறுதல் தருமானால்
அழுவதற்குக் காரணம் தேவையில்லை!
அம்மா என்ற சீவன்
எங்கும் நிறைந்திருக்கும்போது
உன்னை ஞாபகப்படுத்த
எது வேண்டும்.
உன் வியற்வையின் வாசனை சொல்லும்
நீ செய்த தியாகங்கள்.
உன் ஒரு பார்வை காட்டும்
ஓராயிரம் பாச ரேகைகளை.
உன் ஒரு வார்த்தை சொல்லும்
ஓராயிரம் அக்கறைகளை.
உன் ஒரு சிரிப்பு சொல்லும்
ஓராயிரம் மகிழ்ச்சி சாரல்களை.
உன் ஒவ்வொரு அசைவும்
எனக்கே எனக்கான போதும்
உன் ஒரு நொடி பிரிவும்
குழப்பங்களை அரங்கேற்றிடும்
என் வாழ்வில்
முழுதுமாய் பிரிந்து
பிம்பங்களை ஆராதிக்க செய்துவிட்டாயே
தேடியே அலைகிறேன் தேவதையை
மீண்டும் உன் மடி பூக்க

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (2-Mar-15, 3:33 pm)
பார்வை : 275

சிறந்த கவிதைகள்

மேலே