தமிழீழத்தின் கடைக்குட்டி

இரத்தம் உறையும் தமிழீழ
சரித்திரத்தின் கடைக்குட்டி நான்.....!

நீதி கேட்டோர் அநீதியாய் சாகடிக்கப்பட்டனர்...!

ஆயிரம் கோடி மானுடத்தின் உடம்பில்
ஓடும் சிவப்பு திரவம் தானடா
உன்னிலும் அது என்னிலும் ஓடுகிறது....!

தாயையும், தந்தையையும் பறிகொடுத்து
அண்டைய தேசத்தில் அகதிகளாய்.....
பிடி சோற்றிக்காய் பிச்சை எடுக்கின்றோம்......!

உடன்பிறந்தோரை உறுக்குலைத்தப் போதும்கூட
உயிர்காக்க ஒடி ஒளியும் கோழைகளாய் நாங்கள்.....!

தமிழன் என்ற வீரம் மனதினில் நிற்க ......
தமிழனாய் பிறந்ததாலோ என்னவோ ......
தமிழனுக்கான நீதியும்
தாமாதமாய் அல்லவா கிடைக்கிறது....!

எழுதியவர் : யாழினி வெங்கடேசன் (4-Mar-15, 2:23 pm)
பார்வை : 47

மேலே