நீ செய்திருக்கலாமே

நிர்மலமான நடு இரவுகளில்
நிசப்த பொழுதில்
நீ ரகசியக்குரலில்
பாடும் கீதம்
மதில்கள் தாண்டி
என்னை அடையும் போது
எனது பலம் கொண்டு
விடியல்களைத் தள்ளி
வைத்திருக்கிறேன்..
உனக்காகவே..
ஏன்..நீ..
கழுகுகளின்
பேரிரைச்சல்களில்
பேச்சடங்கி
எனைப் பிரிந்து சென்றாய் ..
என்னிடம்கூட சொல்லாமலே ..
உனைக் காப்பாற்றும்
பலம் இந்தப் பள்ளத்திற்கு
ஏது..என்று
எண்ணினாயோ..
மேட்டுக்குடி
வாழ்வில் உன்னை
இழந்ததோடு. .
என்னையும்
அழித்திருக்கலாமே..!

எழுதியவர் : கருணா (4-Mar-15, 10:37 pm)
சேர்த்தது : கருணாநிதி
பார்வை : 347

மேலே