இனி சுவடுகள் எனக்கில்லை…. !
மன்னிச்சுடுங்க
என்னை
மறந்திடுங்க.
அப்பா
ஒத்துக்க மாட்டேன்னுட்டார்
அவசியம்.....
கல்யாணத்துக்கு வந்திடாதீங்க
வந்தா நான் உடைஞ்சுடுவேன்
உன் கல்யாணபத்திரிக்கையை
என் கையில்
திணித்தபொழுது
கைவளையல்களின் அதிர்வில்
சுனாமியை உணரமுடிந்தது
என்னால்..
தலையைக்குனிந்து
நீ அழுகையில்
நாசியின்
வழியாக
சொட்டுசொட்டாய்
வழிகிற
கண்ணீர்துளிகூட
ரோஜாமொட்டிலிருந்து
வழிகிற
மழைநீரைத்தான்
ஞாபகப்படுத்துகிறது....
சிறுதுளிகளில்
கவிழ்கிறது
என் கப்பல்... !
வரக்கூடாத கல்யாணத்திற்கு
வைத்துப்போகிறாய்
பத்திரிக்கையை....
வித்தியாசமானவள்
என்பதற்குத்தான்
காதலித்தேன்
கல்யாணத்தையும்
காதலையும்
வித்தியாசப்படுத்துவாய்
என்பது
தெரியவேயில்லை...
நெருக்கமான
தருணங்களில்
உடைந்த
வளையல்
துண்டுகளே..
இனி
சிலுவை எனக்கு..!
உனக்கு
கணவன்
கிடைத்ததுபோல
எனக்கும்
மனைவி
கிடைக்கக்கூடும்...
காதல்.....?
இமைகள் உதிர்ந்ததுபோல்
அழுதுவிட்டுப்போய்விட்டாய்...
இதயம் உதிர்ந்தபிறகு..
நானெங்கே அழுவது....????