சி த ரி ய எழுத்துக்கள்
சிகரங்களை தொட ,
நினைத்து எழுதிய எழுத்துக்கள் ..
இன்னமும்
கோர்வையாக அச்சிடப்படாமல்
என் இதயத்தில் ....
பக்கதிற்கு பக்கம் உன் நினைவுகளை
புரட்டினாலும் ,
முடிந்து போகாமல் ,
முதல் பக்கமாகவே என் இதயத்தில் ,..
யார் தொலைத்தார்கள் இத்தனை
வார்த்தைகளை என் இதயத்தில் ?
உனக்காகவே வாழ்ந்து தொலைந்து
போனவர்கள் பலருண்டு ...
ஆனால் ,
நீ மட்டும் என்னில் நித்யமாக !