பேனா பேனா பேனா

... "" பேனா பேனா பேனா ""...

விரல்கள் பிடிப்பேனா
தமிழை விதைப்பேனா
இசைந்து இழுப்பேனா
கொஞ்சிப் படிப்பேனா
சொல்லத் துடிப்பேனா !!!

கவிகள் வடிப்பேனா
தூதுகள் விடுப்பேனா
எண்ணித் தவிப்பேனா
அவளிள் உயிர்ப்பேனா
கன்னியிதழ் கடிப்பேனா !!!

தேனென சுவைப்பேனா
சிந்தாது குடிப்பேனா
செல்லமே அடிப்பேனா
தேகத்தில் தைப்பேனா
சிந்தையில் கலப்பேனா !!!

என்னுறவே என்பேனா
விழியோர மைப்பேனா
உன்னை மறப்பேனா
என்றும் வெறுப்பேனா
இன்றும் நீ என்பேனா !!!

என்றும் உங்கள் அன்புடன்,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்.....

எழுதியவர் : அப்துல்ஹமீது(எ)சகூருதீன்.. (7-Mar-15, 11:19 am)
பார்வை : 734

மேலே