இறைவன் போட்ட கணக்கு
காதல் என்பது
கடவுள் போடும் முடிச்சு
என்றைக்கோ எழுதிய எழுத்து
காலம் நேரம் வரும்போது
கூடிவரும் தேடிவரும்
காதல் எனும் பாதையில்
இணைந்திடும் இரு உள்ளங்கள்
இது இறைவன் போட்ட கணக்கு
யார் தடுத்தும் ஏது பயன்
சந்திக்கின்ற மனம் இரண்டும்
சிந்திக்கின்ற காதலுக்கு
துணிந்து செல்ல உள்ளம் உண்டு
தொடர்ந்து வர துணையும் உண்டு