தாய் ஆகின்ற தாரம்

'தான் எல்லா இடத்திலும் இருக்க இயலாது
என்றுதான் இறைவன் தாயைப் படைத்தான்' என்பவர்கள்,
சாத்தான் திருவிளையாடலை சொல்வதில்லை!
தான் எல்லா இடத்திலும் இருக்க இயலாது
என்றுதான் சாத்தானும் தாரத்தைப் படைத்தான்!
ஒன்றை கவனிக்க வேண்டும்!
பெண் தாரமாகித் தான், தாயாகிறாள்.
' ஒவ்வொரு ஞானிக்கும் கடந்த காலம் உண்டு!
அதுபோல், ஒவ்வொரு பாவிக்கும் எதிர்காலம் உண்டு'
என்றது தாரம் தாயாவது குறித்துத்தானோ!
ஒரு தாரமாக, சாத்தானாக, நம்மை கருத்தரித்தவள்,
ஒரு தாயாக, தெய்வமாக மாறி நமக்கு பாலூட்டினாள்.
சுயநலம், மனித நேயம் இவற்றினூடே ஊசலாடுகிறோம்.
சேற்றினிலே பூத்த செந்தாமரை நாம்! -
துக்கத்தினுள்ளே ஒளிரும் சுகத்தின் ஜோதி!-
காமத்தில் மலர்ந்த காம நாசினி!
சாத்தானும், தெய்வமும் வேறு வேறல்ல!
ஒரே பெண் தாரமாகவும், தாயாகவும் உள்ளது போல்தான்!
இன்பத்தின் மறு பக்கம் துன்பம் என்பது போல்தான்!

எழுதியவர் : tssoma எனும் சோமா (8-Mar-15, 12:28 am)
பார்வை : 978

மேலே