மீண்டும் கிடைக்குமா உன் நட்பு
நான் தேடிய தேவதையே தோழியே
நட்பாய் வந்தாயே
தோளில் சாய்ந்து கொண்டால்
துயரம் இல்லை என்றாயே
சோர்ந்து நான் படுத்தால்
துயரம் கொண்டாயே
எல்லா நிமிடங்களும்
எனகென தந்தாயே
உனக்கென வாழ்கை உண்டு
நினைக்க ஏன் மறந்தாய்
நானும் கண்டதில்லை
உன்னைப்போல் ஒரு நட்பை
என் தாயும் தந்ததில்லை உன்போல் பாசத்தை
இனிவரும் ஜென்மம் எல்லாம்
எது உண்டோ இல்லையென்றோ
கவலை எனக்கு இல்லை
உன் நட்பு தொடர்ந்துவிட்டால்