இலட்சியம்

மகளிர் தினத்தின் பெருமையினை
மகளிர் எழுதக் கூடாது
மகளிர் மகிமை உணர்ந்த மகான்கள்
எழுத வேண்டும்
பெண்ணின் பெருமை பெண்ணால்
புகழக் கூடாது
அவளின் அன்பும் அணைப்பும்
பொறுமையும்
காண்பவர் எழுதிட வேண்டும்
மகளிர் பெருமை மேலோங்க
மகளிர் என்றால் மதிக்கும்
மனித மனங்கள் வாழ வேண்டும்
பெண்ணின் இதயம் பூவாக
போற்றும் உள்ளம் வர வேண்டும்
அதுதான் மகளிர் தினத்தின்
குறிக்கோளாய்
அமையும் நல்ல இலட்சியமாம்

எழுதியவர் : பாத்திமா மலர் (8-Mar-15, 10:15 pm)
சேர்த்தது : பாத்திமா மலர்
Tanglish : elatchiam
பார்வை : 114

மேலே