--- இல்லாத இடம் தேடி ----- ராம் வசந்த்

என் வாழ்த்துக்கள்
காலாவதி ஆகட்டும்

மகளிர் தினம்
அன்னையர் தினம்
நண்பர்கள் தினம்
காதலர் தினம்

பெண்கள் யாவர்க்கும்
வாழ்த்து சொன்னேன்
சொல்கிறேன்
இனி சொல்வேனா ?

நன்றியோ
உனக்கும் அதே எனவோ
வரும் செய்திகளில்
பூரித்தேன்
பூரிக்கிறேன் இனி பூரிப்பேனா ?

"எனக்காக
நிமிடம் தாயேன்"
எனும் என்னருகில்
ஒரு பெண்ணின் குரல்...
என் வாழ்த்துக்களை
சாபங்கள் ஆக்கக் கூடும்

எனவே,
என் வாழ்த்துக்கள்
காலாவதி ஆகட்டும்...

எழுதியவர் : ராம் வசந்த் (8-Mar-15, 9:19 pm)
பார்வை : 315

மேலே