இருளையே நேசிக்கிறேன்
இருளது விடிந்தாலும் -நான்..
இருளையே நேசிக்கிறேன்
இருள்தந்த கனவால் தினமும்
விடியலை வெறுக்கின்றேன்
உலகமே இருண்டாலும் -என்
உள்ளத்தில் ஒளியிருக்கும்
உணர்வென்ற திரியின்மேலே
என்கவிதை விளக்கெறியும்
அறியாமை எண்ணெய்யெரிந்து -அங்கே
அறிவின் ஒளிவிரியும்
விடிந்தால் ஒழியும் மனங்கள்
இருளில் ஒளிர்ந்திருக்கும்
இருளதில் இருந்தால்தானே !
விடியலை மனந்தேடும்
இருளின் இறப்பில்தானே-பல..
விடியல்கள் பிறப்பெடுக்கும்
இறப்பிலும் பிறப்பெடுக்க -நான்
இருளையே நேசிக்கிறேன்..
(காதல் தோல்வியை இருளென்ற வார்த்தையில் பொறுத்தி பொருள் பெறலாம்)