முகப்புத்தகம்

டேய்.... மார்க் பயலே.... உனக்கு நான் என்ன பண்ணினேன்.... உன்னுடைய கடை நல்லாதானே போய்க்கிட்டு இருக்கு. நீ விளையாடுவதற்கு என்னுடைய வோலும்(wall) வாழ்க்கையும் தான் கிடைச்சுதா உனக்கு....

நான் யாரை லைக் பண்ணினா உனக்கென்ன... யாருக்கு கமெண்ட் பண்ணினா உனக்கென்ன..... யாருடைய கமென்ட லைக் பண்ணின உனக்கென்ன....

உனக்கென்ன.... உனக்கென்ன.... உனக்கென்ன.... உனக்கென்ன....

அதையெல்லாம் எதுக்கு என்னுடைய டைம் லைன் ல போட்டு யார் யாருக்கோ எல்லாம் போட்டு கொடுக்கிறாய்.




மார்க்..... இந்த நாள்.... நீ ஒன்றை மட்டும் தெரிஞ்சுக்கோ.....

நீ அடுத்தவன் பொண்டாட்டியை கட்டிப்பிடித்தால் அது மரியாதை.
ஆனால்
நாம அடுத்தவன் பொண்டாட்டியை அல்ல அடுத்தவன் பொண்ணைப் பார்த்தாலே நம்ம மரியாதை போயிடும்.....

நமக்கும் 'அச்சம், மடம், நாணம்,.... அடுத்ததென்ன..... (இருக்கா வேண்டியவங்களுக்கே தெரியுமோ தெரியாது. குத்தைகைக்கு எடுத்த நமக்கெதற்கு...) எல்லாமே இருக்கு....


யாரையாவது கோர்த்துவிடு.... ஆனால், போட்டுக்கொடுக்காதே....

தயவுசெய்து புரிஞ்சுக்கோடா........... ப்ளீஸ்...........

எழுதியவர் : விக்கிரமவாசன் வாசன் (9-Mar-15, 10:47 pm)
Tanglish : mugapputthagam
பார்வை : 189

மேலே