காதல் வண்ணம்

அள்ளி எடுத்த மல்லிகை
அழகாய் காதல் புன்னகை
இவள்தான் எந்தன் மேனகை
இதழ்கள் இளமைத் தூரிகை

முத்தத்தின் வண்ணங்கள் தென்றலிலே
முகிழ்ந்திடக் காண்கிறேன் வானவில்லே......! எனை
இப்போதும் தென்றல் தீண்டுதே
இன்பச் செவ்வானம் வண்ணங்கள் தூவுதே...!

இப்படி என்று எப்படி சொல்வேன்
அப்படிப் பட்டதே காதல் நினைவு

கண்ணடி பட்ட காயத்திற்கு
மருந்து சொல்லடி
கண்ணே நீயே என் மனது....!!

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (10-Mar-15, 3:26 pm)
Tanglish : kaadhal vannam
பார்வை : 113

மேலே