ஈழ சிலுவைகள்

ஈழம்....
கருவறைக்குள் முடிந்த விடியல்...
பினகிடங்குகளின் பிரிய வசிப்பிடம்...
வாழ்ந்தவர்களின்,
வாழநின்றவர்களின்,
தேய்பிறை தேசம்...
இங்கு முளைத்த பூக்கள் மட்டுமே பூகம்ப சேற்றில் சிக்குள்ளும்...
சிவந்த சூரியனோ இங்கு மட்டும் மங்கி பிறக்கும்...
ஆம் இது பல ஏசுமார்கள் சிலுவை பட்ட தேசம்...
பகைமை வெறி பிடித்தமையால் பாற்பட்ட தேசம்.....
இங்கு அரும்பிய பிஞ்சுகள் தொட்டில் விளையாட்டில் திளைக்கவில்லை,
பாய்ச்சல் தோட்டாக்களில் நெஞ்சம் துளைத்தன....
இளங்காளைகள் காதல் விளையாட்டில் களித்திருக்கவில்லை,
மரணத்தால் கடிக்க பெற்று,
கத்தரிக்க பட்டனர்....
பட்ட மரங்களும்,
சிவப்பு கோர்த்த நதிகளும்,
பினந்திண்ணி கழுகுகளின் ஏக ஏப்பமும்,
அலறல் சப்தங்களும்,
பினவாடைகளும்,
காற்றின் சுவற்றில் சித்திரங்களாய் எழும்பி இருந்தன...
தெருக்கள் நகர்ந்தன வெறுமை என்னும் ஓடயாய்..
நாட்கள் பிறந்தன முட்களின் கூர்மையாய்...
குண்டும்,புகையும் அந்த குறிஞ்சி பூக்களின் குணம் கெடுத்தன....
முணகி ,அழுது உயிர் உதிர்க்கும் தேசமய்யா அது....
இரண வடுக்களை ஒருசேர ஆண்டு முடிக்கும்...
ஆசைகளை எறித்து,
அகபேயை,
பயமாய் வளர்த்து,
அவல கீதங்களாய் அங்கேயே சமாதி ஏறின...
இலட்சோப லட்சங்கள்,
இலட்சனை இழந்தன..
ஓடவும்,பதுங்கவுமே இவர்கள் பாக்கியம் பெற்றார்கள் போலும்..
சோற்றுக்கும்,
மருந்துக்கும்,
அரக்கர் பலர் கூத்திற்கும்
இடையே இவர்கள் உயிர் வாழ்வு நிச்சயிக்க பட்டதன்றோ...
பகைமை வேறருந்து,
மீத உயிர்கள்,
நல்வாழ்வுடன் உடன்பாடு படலாமோ?
வழியேதும் உண்டோ?
சொல்வீர் உலக சாதிகளே...
கடை தேசங்களே,
மனிதம் பேசும் மார்கங்களே.....சொல்வீர்..
மாதர்களும்,கிழவர்களும்,
வீர சேனைகளும்,
ஓரிரு இராவுகளிலெல்லாம் சிவப்பு திராவகமாய் உருமாறிய செய்தி கேட்டு
பதில் சொல்வீர்...
ஈழ தாய் தம் பிஞ்சுகளை பிரசவிக்காமலே,
தம் உயிர் மூச்சை மறித்து கொண்டாள்...
இவளுக்கு அஞ்சலி செலுத்தியது தவிர்த்து,
வேறென்ன செய்வதாய்
உமக்கெல்லாம் உத்தேசம்....சொல்வீர்...