வண்ண மலரே மௌனமா 555

மலரே...

நீ குட்டி குட்டி செடிகளிலும்
புன்னகையோடு மலர்கிறாய்...

உயர்ந்த செடிகளிலும்
மலர்கிறாய்...

உனக்கோ வண்ணங்கள் பல
நறுமணங்களும் பல...

உன் இதழ்களும்
பல அழகுடன்...

பகலிலும் மலர்கிறாய்
இரவிலும் மலர்கிறாய்...

நீரிலும் மலர்கிறாய்
நிலத்திலும் மலர்கிறாய்...

நீ இல்லாமல்
சுபநிகழ்சிகள் இல்லை...

நீ இல்லாமல் கோவிலும்
இல்லை...

உன்னை ரசிக்காத
மனிதர்களும் இல்லை...

உன் புன்னகையில் மயங்காத
மனிதர்களும் இல்லை...

வண்ணத்து பூச்சிகளுக்கு
தேனாக கொடுக்கிறாய் உணவாக...

வண்ணங்கள் பல கொண்டு
மயக்குகிறாய் வண்டுகளை...

உன் துணையோடுதான்
வருகிறாள்...

ஒவ்வொரு மணமேடையிலும்
மணப்பெண்கள்...

நீ யாருக்கும்
அடிமை இல்லை...

யார் சொல்லியும்
மலர்வதில்லை...

நீயாக மலர்கிறாய்
நீயாக வாடிவிடுகிறாய்...

நீ சிரித்து மலர்வது கொஞ்ச
நேரம் என்றாலும்...

எல்லோருக்கும் சந்தோசத்தை
கொடுக்கிறாய்...

மனிதர்களின் இறுதி
ஊர்வலத்தில் கூட...

மலரே உனக்காக வர்ணிக்க
எங்களிடம் வார்த்தைகள் இல்லை...

உன் அழகுக்கு இணையும்
இல்லை உலகில்...

மலரே...மலரே...மலரே.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (10-Mar-15, 9:29 pm)
பார்வை : 180

மேலே